தமிழ்நாடு மற்றொரு போராட்டத்திற்கு தயாராகிவருகிறது.

தற்போது தமிழ்நாடு மற்றொரு போராட்டத்திற்கு தயாராகிவருகிறது. ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களுக்கு இனி சுற்றுச் சூழல் துறையிடம் அனுமதி வாங்க தேவையில்லை; பொதுமக்களின் கருத்துகளையும் கேட்க வேண்டாம் என்றும் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது டெல்டா மாவட்ட மக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிராக திமுக போராட்டத்தை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று (ஜனவரி 22) வெளியிட்ட அறிக்கையில், “காவிரி டெல்டா பகுதிகளைப் பாலைவனமாக்கி விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் துரோகமாக திமுக இதைக் கருதுகிறது.பாஜக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமருக்குக் கடிதம் எழுதுகிறார். அதே நேரம் அவரது அமைச்சரவையில் சுற்றுச் சூழல் துறை அமைச்சராக இருக்கும் கருப்பண்ணன், அனுமதி மற்றும் கருத்துக் கேட்புக் கூட்டங்கள்