இறந்தவர் கண் அரவிந்த்கண் மருத்துவமனைக்கு தானம்.
திண்டிவனத்தில் இறந்த அம்மையாரின் கண்கள் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.

 

திண்டிவனம் சஞ்சீவிராயன் பேட்டையில் வசிக்கும் பக்தவச்சலம் மனைவியும்,அரிமா சங்கத்தின் மாவட்டத் தலைவர்  கார்த்திக் மற்றும் மக்கள் தொலைக்காட்சி செய்தியாளர் சரவணன் ஆகியேரின் தாயார் சரஸ்வதி அம்மாள் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் உயிரிழந்தார். அவரது கண்களை அவரது குடும்பத்தினர் தானம் செய்ய விரும்பினர். ஆகையால் திண்டிவனம் அரிமா சங்கத்தின் சார்பில் அவரது கண்கள் தானமாக  பெற்று புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திண்டிவனம் அரிமா சங்கத் தலைவர் கிரிதர பிரசாத் ,மாவட்ட தலைவர் ஓவியர் தேவ் ,நவநீத கண்ணன், செயலாளர் சங்கர், பொருளாளர் அன்னை சஞ்சீவி, மாவட்டத் தலைவர்கள் சைமன் துரைசிங், தமிழமுதன், சாம்ராஜ் சம்பத்குமார், கோதை  பாலாஜி, மணிலா நகர் தலைவர் பாபு  மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் பத்திரிக்கையாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் அரிதாஸ் தலைமையில் சரஸ்வதி அம்மாள் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்